டாஸ்மாக் கடைகள் திறக்க எதிர்ப்பு: பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சேலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்:
கொரோனா பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தினர். சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் மேற்கு மாவட்ட பா.ஜனதா பொறுப்பாளர் கோபிநாத் தனது வீட்டின் முன்பு நின்று டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார். அவருடன் மாவட்ட பொதுச்செயலாளர் சசிகுமார், அமைப்பு சாரா பிரிவு மாவட்ட தலைவர் அபிராமி முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அப்போது டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதேபோல் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களிலும் பா.ஜனதா கட்சியினர் தங்களது வீடுகள் முன்பு நின்று டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.