பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மதுரை, சமயநல்லூரில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
வாடிப்பட்டி
மதுரை, சமயநல்லூரில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
சமயநல்லூரில் காங்கிரஸ் கட்சி அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பாக பெட்ரோல்,டீசல் விலை உயர்வு மற்றும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் சங்க வட்டார தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். சங்க மாவட்ட தலைவர் சோனைமுத்து, கட்சி நிர்வாகிகள் சுப்பாராயல், வையாபுரி, செல்லப்பா சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க வட்டார தலைவர் பொன்னுசாமி வரவேற்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தை காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைத்தலைவர் எஸ்.எஸ்.குருசாமி தொடக்கி வைத்தார். இதில் கட்சி நிர்வாகிகள் வக்கீல் அரவிந்தராம், கோபால் நேரு, முத்துபாண்டி, விவேகானந்தன், மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம கமிட்டி தலைவர் முத்தையா நன்றி கூறினார்.
மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம்
மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மதுரை தெற்கு வெளி வீதியில் மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மத்திய அரசை கண்டித்து பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.