சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்ட வீடியோ குறித்து அதிகாரிகள் விசாரணை
சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்ட வீடியோ குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்
விராலிமலை
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா கொடும்பாளூர் அருகே உள்ள காயாம்பட்டி கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட கலைக்கூத்து கலைஞர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அவர்கள் தங்களுக்கு யாரும் உதவவில்லை எனக் கூறி சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று பதிவிட்டிருந்தனர். அதனை பார்த்த மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி இதுகுறித்து விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, விராலிமலை தாசில்தார் சதீஸ் சரவணகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் காயாம்பட்டி கிராமத்திற்கு சென்று அங்குள்ள கலைக்கூத்து கலைஞர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது கலைக்கூத்து கலைஞர்கள், தங்களுக்கு சாலை வசதி, மின்சார வசதி, குடியிருக்கும் பகுதிக்கு பட்டா, குழந்தைகள் படிப்பதற்கு படிப்பு வசதி செய்துதர வேண்டும் என அதிகாரிகளிடம் முறையிட்டனர். அதற்கு அதிகாரிகள் நீங்கள் தங்கி இருக்கும் பகுதி மேய்ச்சல் தரை புறம்போக்கு பகுதி என்பதால் இந்த இடத்திற்கு பட்டா வழங்க முன்மொழிவுகள் பரிந்துரை செய்யப்பட்டு உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது எனவும், கல்வித்துறை மூலம் குழந்தைகளுக்கு கல்வி வசதி செய்து தருவதாகவும் அவர்களிடம் தெரிவித்தனர். சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்ட வீடியோவை பார்த்து சமூக ஆர்வலர்கள் மற்றும் தொண்டு அமைப்பினர் கலைக்கூத்து கலைஞர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.