டாஸ்மாக் கடை திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2021-06-13 20:11 GMT
புதுக்கோட்டை
தமிழகத்தில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்று (திங்கட்கிழமை) முதல் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்தும், தொற்று அதிகமாகும் எனவும், டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி பா.ஜ.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டையில் மாவட்ட துணை தலைவர் கணேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல நகரில் பல்வேறு இடங்களில் கைகளில் பதாகைகளை ஏந்தி கோஷம் எழுப்பினர்.

மேலும் செய்திகள்