இன்று டாஸ்மாக் கடைகள் திறப்பு: 200 மீட்டர் தொலைவில் டோக்கன் வழங்க ஏற்பாடு; தடுப்பு அரண்களும் அமைக்கப்பட்டன

டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட இருப்பதையொட்டி கடைகள் முன்பாக தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டுள்ளன. 200 மீட்டர் தொலைவில் டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-06-13 19:44 GMT
திருச்சி,
டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட இருப்பதையொட்டி கடைகள் முன்பாக தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டுள்ளன. 200 மீட்டர் தொலைவில் டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகள்

கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழகத்தில் பல தளர்வுகளுடன் ஐந்தாவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் டாஸ்மாக் கடைகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த அறிவிப்பினை தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் முன்பாக நேற்று தடுப்பு அரண்கள் (பேரிகாட்) அமைக்கும் பணிகள் நடைபெற்றது. தடுப்பு அரண்களுக்குள் 6 அடி இடைவெளியில் வெள்ளைநிற பெயிண்டால் தலா ஒரு வட்டம் வரையப்பட்டுள்ளது.

185 கடைகள்

இந்த வட்டத்திற்குள் நின்று தான் மது பிரியர்கள் தங்களுக்கு தேவையான மது பாட்டில்களை வாங்கிக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 185 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இவற்றில் திருச்சி நகர பகுதியில் மட்டும் 78 கடைகள் அமைந்துள்ளன. 

இன்று காலை 10 மணிக்கு திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள் மாலை 5 மணி வரை செயல்படும். டாஸ்மாக் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக மேற்பார்வையாளர் மற்றும் பணியாளர்கள் ஒலிபெருக்கி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். 

டோக்கன் வினியோகம்

மேலும் மாநகர பகுதியில் 200 மீட்டர் தொலைவில் வைத்தும், புறநகர் பகுதியில் 100 மீட்டர் தொலைவில் வைத்தும் வாடிக்கையாளர்களுக்கு டோக்கன் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். பணியாளர்கள் அடையாள அட்டை அணிந்து பணியாற்ற வேண்டும். அதே நேரத்தில் லுங்கி அணிய கூடாது என்றும் கலெக்டர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்