போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பலி
போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பரிதாபமாக உயிரிழந்தார்.;
உப்பிலியபுரம்,
உப்பிலியபுரம், எரகுடியை அடுத்துள்ள வெங்கட்டம்மாள் சமுத்திரத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 55). கரூர் மாவட்டம் மாயனூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு, கோவையில் சிகிச்சை பெற்று வந்த பாஸ்கர், சிகிச்சை பலனின்றி நேற்று காலை மரணமடைந்தார். அவரது உடல் வெங்கடம்மாள் சமுத்திரத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.