பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என்று வலியுறுத்தி பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மாவட்ட பா.ஜ.க. தலைவர் அய்யப்பன் தலைமையில், வேலாயுத நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, டாஸ்மாக் கடை திறக்கப்படும் என்ற முடிவை மாநில அரசு கைவிட வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாணவர்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதில் மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர தலைவர் ராமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் கிராமத்தில் மருத்துவ அணி மாவட்ட தலைவர் டாக்டர் பரமேஸ்வரி மற்றும் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் தா.பழூர் ஒன்றிய பா.ஜ.க. சார்பில் கட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் வீடுகளின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி பிரிவு தலைவர் இளையராஜா, அவரது வீட்டின் முன்பு குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதில் அணைகுடம் ஊராட்சி தலைவர் தேவிகா இளையராஜா, பா.ஜ.க. பொறுப்பாளர் அருள்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.