பெண்ணை கல்லால் தாக்கிய தம்பதி மீது வழக்கு
மானூர் அருகே பெண்ணை கல்லால் தாக்கிய தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மானூர்:
மானூர் அருகே உள்ள அழகியபாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் செல்வசுந்தர் மனைவி கமலா (வயது 53). இவருக்கும், இவரது உறவினரான அதே ஊரைச் சேர்ந்த ஜான்சன் (45) என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சினையால் முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஜான்சன் மற்றும் அவரது மனைவி மணிமாதா (42) ஆகிய இருவரும் சேர்ந்து கமலாவை கல்லால் தாக்கினர். இதில் கமலாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுபற்றிய புகாரின் பேரில் மானூர் போலீசார் ஜான்சன், மணிமாதா ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.