பழனியில், திருமணத்தையொட்டி அம்மா உணவகத்தில் புதுமண தம்பதி உணவு வழங்கினர்.
பழனியில், திருமணத்தையொட்டி அம்மா உணவகத்தில் புதுமண தம்பதி உணவு வழங்கினர்.
பழனி:
பழனியை சேர்ந்தவர் ரவீந்திரன் சபரிநாதன். தொழிலதிபர். இவருக்கும், மகாலட்சுமி என்பவருக்கும் நேற்று பழனி அடிவாரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. ஊரடங்கு காரணமாக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் முககவசம் அணிந்து கலந்துகொண்டனர். பின்னர் மணமக்கள் தங்களது திருமண விருந்தாக ஏழைகளுக்கு உணவு அளிக்க முடிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் பழனி அம்மா உணவகத்தில் 300 ஏழைகளுக்கு தயிர்சாதம், சாம்பார் சாதம், பாயாசத்துடன் உணவு அளித்தனர். உணவருந்தியவர்கள் புதுமண தம்பதியை வாழ்த்தி சென்றனர்.