நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 373 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்தது
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 373 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்தது
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 373 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்து உள்ளது.
373 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 39 ஆயிரத்து 738 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 16 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 39,754 ஆக அதிகரித்தது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 373 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,127 ஆக அதிகரித்து உள்ளது.
4,317 பேருக்கு சிகிச்சை
இதற்கிடையே நேற்று மாவட்டத்தில் 734 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 35 ஆயிரத்து 458 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 352 பேர் இறந்து விட்ட நிலையில், 4,317 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்து வந்தாலும், பொதுமக்கள் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவற்றை தவறாமல் மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
=========