சிப்காட் பகுதியில் முக கவசம் அணியாத 20 பேருக்கு அபராதம்

சிப்காட் பகுதியில் முக கவசம் அணியாத 20 பேருக்கு அபராதம்

Update: 2021-06-13 18:29 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் நேற்று சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாமலும், முகக் கவசம் அணியாமலும் நடமாடிய 20 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தனர். 
மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 2 கடைகளுக்கு தலா ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. சிப்காட் பகுதியில் ஊரடங்கை மீறி தேவையின்றி சுற்றித்திரிந்த ஒருவரின் மோட்டார்சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்