ஸ்ரீவில்லிபுத்தூரில் கொரோனா நிவாரண உதவி
ஸ்ரீவில்லிபுத்தூரில் கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது.;
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ரெகுலர் லாரி டிரான்ஸ்போர்ட், டிராவல்ஸ் ஏஜென்டுகள் முன்னேற்ற நலச்சங்கத்தில் அதிக ஏஜென்டுகள் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் கொேரானா காலத்தில் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் சங்கத்தை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் மற்றும் சட்ட ஆலோசகர் சிவகுமார் ஆலோசனையின்படி சங்கத்தலைவர் சுதர்சன், செயலாளர் தாமோதர கண்ணன், பொருளாளர் முத்துவேல் ஆகியோர் முன்னிலையில் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் நிவாரண பொருட்கள், அரிசி பலசரக்கு வழங்கப்பட்டது.