சாராயம் காய்ச்சப்படுகிறதா ஆளில்லா குட்டி விமானம் மூலம் போலீசார் கண்காணிப்பு

பொள்ளாச்சி அருகே சாராயம் காய்ச்சப்படுகிறதா? என ஆளில்லாத குட்டி விமானம் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.;

Update:2021-06-13 23:36 IST
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே சாராயம் காய்ச்சப்படுகிறதா? என ஆளில்லாத குட்டி விமானம் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

மது விற்பனை 

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்துடன் டாஸ்மாக் கடைகள் திறக்கவும் அனுமதி இல்லை. 

இதனால் பல இடங்களில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து மது விற்பனை நடந்து வருகிறது.

அதுபோன்று சாராயமும் காய்ச்சப்பட்டு வருகிறது. இதைத் தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு சாராய ஊறல்களை அழித்து வருகிறார்கள். 

தீவிர சோதனை 

இந்த நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த செம்மணாம்பதி வனப்பகுதியில்சாராயம் காய்ச்சப்படலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. 

இடையடுத்து மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தர்ராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சின்ன காமணன், ராஜபிரபு மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் வந்தனர்.

 பின்னர் அவர்கள் அந்த வனப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்
.
குட்டி விமானம் மூலம் கண்காணிப்பு 

அதுபோன்று ஆளில்லா குட்டி விமானமும் கொண்டு வரப்பட்டது. அதை பறக்கவிட்டு அதன் மூலமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

 அத்துடன் காட்டுப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டும் போலீசார் சோதனை செய்தனர். 

இந்த சோதனையின் போது அங்கு யாரும் சாராயம் காய்ச்சவில்லை என்பது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் அங்கிருந்து திரும்பினார்கள்.

மேலும் செய்திகள்