கிணத்துக்கடவு தாலுகாவில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்க டோக்கன் வினியோகம்

கிணத்துக்கடவு தாலுகாவில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்க டோக்கன் வினியோகம்

Update: 2021-06-13 17:53 GMT
கிணத்துக்கடவு

கொரோனா நிவாரண தொகையாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது. 

2-வது கட்டமாக ரூ.2 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.  

இதற்காக கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுவீடாக டோக்கன் வினியோகம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 
 
இதுகுறித்து கிணத்துக்கடவு வட்ட வழங்கல் அதிகாரி முத்து கூறும்போது, கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் உள்ள 32ஆயிரத்து 781 பேருக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. 

ஒவ்வொரு ரேஷன் கடையிலும் தினமும் 200 பேருக்கு வழங்கப்படும். எனவே பொதுமக்கள் சமூக இடைவெளிவிட்டு முகக்கவசம் அணிந்து வாங்கிச்செல்ல வேண்டும் என்றார். 

மேலும் செய்திகள்