அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட கோரிக்கை
அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம்
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், மாயனூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேல மாயனூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லை. இதனால் வாய்க்கால் பகுதியில் சுற்றித்திரியும் ஆடு, மாடுகள், நாய்கள் சில நேரங்களில் பள்ளி வளாகத்தில் அசுத்தம் செய்கிறது. சில நாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு வருகின்றன. இதனால் பள்ளிக்கு பாதுகாப்பு இல்லை. எனவே மாணவ-மாணவிகளின் நலன் கருதி பள்ளி திறப்பதற்குள் சுற்றுச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.