கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-06-13 17:35 GMT
விருதுநகர், 
விருதுநகர் அண்ணாநகர் பகுதியில் புறநகர் போலீசார் ரோந்து சென்றபோது அங்கு ஒரு பாழடைந்த வீட்டில் அந்த பகுதியை சேர்ந்த தன்ராஜ் (வயது 55) என்பவர் கள்ளச் சாராயம் காய்ச்சி கொண்டிருப்பதை கண்டனர். இதனை தொடர்ந்து அவர் வைத்திருந்த 20 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் தன்ராஜ் மற்றும் அவருடன் இருந்த அந்த பகுதியை சேர்ந்த மகாலிங்கம் (45), ஆரோக்கியசாமி (41) ஆகிய 3 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்