60 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்

விருதுநகரில் இருந்து கட்டத்தப்பட்ட 60 மூடை ரேஷன் அரிசியை போலீசார் வேனுடன் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.

Update: 2021-06-13 17:29 GMT
விருதுநகர், 
விருதுநகரில் இருந்து கட்டத்தப்பட்ட 60 மூடை ரேஷன் அரிசியை போலீசார் வேனுடன் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
விசாரணை
விருதுநகர்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கள்ளிக்குடி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விருதுநகரில் இருந்து மதுரை நோக்கி வந்த ேவனை போலீசார் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். இதில் வேனில் இருந்த 2 பேர் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்தனர். 
இதையடுத்து போலீசார் வேனில் சோதனையிட்டபோது 60 மூடை ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அதற்கு முறையான ஆவணங்கள் இல்லாமல் இருந்தது. மேலும் விசாரணை நடத்தியபோது விருதுநகர் மத்திய கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் இருந்து கொண்டு செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.
கைது 
இதைத்தொடர்ந்து 60 மூடை ரேஷன் அரிசிையயும் போலீசார் வேனுடன் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரையை சேர்ந்த பாண்டி (வயது40), முனியசாமி (32) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்