பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-06-13 17:27 GMT
கரூர்
கரூர் வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னுச்சாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரசு காலனி பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தங்கராஜ் நகர் பகுதியில் பணம் வைத்து சூதாட்டதில் ஈடுபட்ட சிவராஜ் (வயது 45) உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்