தேன்கனிக்கோட்டை அருகே கிராமத்துக்குள் புகுந்த காட்டுயானை

தேன்கனிக்கோட்டை அருகே கிராமத்துக்குள் காட்டுயானை புகுந்தது.

Update: 2021-06-13 17:26 GMT
தேன்கனிக்கோட்டை,

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கண்டகானப்பள்ளி கிராமத்திற்குள் நேற்று காட்டுயானை ஒன்று புகுந்தது. ஆக்ரோஷத்துடன் சுற்றித்திரிந்த இந்த யானையை பார்த்து பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். இதுகுறித்து கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் பட்டாசுகளை வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்த யானை ஊருக்குள் நுழையாதவாறு அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்