ஊத்தங்கரை அருகே ரெயில்வே தண்டவாளத்தில் கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்த வடமாநில வாலிபர்

ஊத்தங்கரை அருகே ரெயில்வே தண்டவாளத்தில் கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் வடமாநில வாலிபர் பிணமாக கிடந்தார்.

Update: 2021-06-13 17:25 GMT
கல்லாவி:
ஊத்தங்கரை அருகே சாமல்பட்டி-குன்னத்தூர் இடையே ரெயில்வே தண்டவாளத்தில் கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர். அதில் இறந்து கிடந்த வாலிபர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஆனந்தகுமார் ககீர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்