கரூர் அருகே புரவிபாளையத்தில் பாழடைந்து கிடக்கும் சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு விடப்படுமா?
கரூர் அருகே புரவிபாளையத்தில் பாழடைந்து கிடக்கும் சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு விடப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.;
கரூர்
சுகாதார வளாகம்
கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட புரவிபாளையம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இயற்கை உபாதையை கழிப்பதற்கு சுகாதார வளாகம் இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் திறந்த வெளியில் மலம் கழித்து வந்தனர். இதனால் புரவிபாளையம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொது நிதி திட்டத்தில் மூலம் ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனியாக பொது சுகாதார வளாகம் துணி துவைத்தல், குளியல் அறை உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டது. இதனால் பொதுமக்கள் அதனை பயன்பாடுத்தி வந்தனர்.
எதிர்பார்ப்பு
இந்தநிலையில் சுகாதார வளாகம் சரியாக பராமரிக்கப்படவில்லை. மேலும் அங்கு மின்விளக்குகளும் இல்லை. இதனால் சுகாதார வளாகம் பயன்பாடற்று கிடைக்கிறது. இதனால் சிலர் சுகாதார வளாகத்தை சுற்றி மலம் கழித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சுகாதார வளாகத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து உள்ளதால் பாழடைந்து காணப்படுகிறது. தற்போது மழைகாலம் தொடங்க உள்ள நிலையில் மேலும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சுகாதார வளாகத்தை சுத்தம் செய்து, பயன்பாட்டிற்கு விடப்படுமா? என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.