சித்த மருத்துவ கொரோனா ைமயத்தில் 650 ேபர் குணமடைந்துள்ளனர்
சித்த மருத்துவ கொரோனா ைமயத்தில் 650 ேபர் குணமடைந்துள்ளனர்;
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டையை அடுத்த புதுப்பேட்டை அக்ராகரம் பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு, கொரோனா நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்தக் கொரோனா சிகிச்சை மையத்தில் இதுவரை 720 பேர் சிகிச்சைக்காக சேர்ந்து, அதில் 650 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக, சித்த மருத்துவ டாக்டர் விக்ரம்குமார் தெரிவித்துள்ளார்.