ஆண்டியப்பனூர் அணையில் ரூ.4½ கோடியில் பூங்கா அமைக்கும் பணி. கலெக்டர் சிவன்அருள் ஆய்வு

ஆண்டியப்பனூர் அணையில் ரூ.4½ கோடியில் அமைக்கப்பட்டு வரும் பூங்கா பணிகளை கலெக்டர் சிவன்அருள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2021-06-13 16:39 GMT
திருப்பத்தூர்

கலெக்டர் ஆய்வு

திருப்பத்தூர் அருகே உள்ள ஆண்டியப்பனூர் அணை கடந்த ஆண்டு பெய்த மழையினால் நிரம்பியது. தற்போது அணையின் மொத்த உயரமான 8 மீட்டர் உயரத்தில் 6.3 மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் உள்ளது. இந்த நிலையில் கலெக்டர் சிவன்அருள் அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுப்பணித்துறை நீர்வள ஆதார துறை உதவி செயற்பொறியாளர் குமாரிடம் விவரம்  கேட்டு அறிந்தார்.

அணையின் நீர்வரத்து கால்வாய்கள் மற்றும் நீர் வெளியேற்றும் கால்வாய்களில் உள்ள அடைப்புகள், செடிகள் அகற்றப்பட்டு வருகிறது என்று உதவி பொறியாளர் தெரிவித்தார்.

ரூ.4½ கோடியில் பூங்கா

மேலும் அணையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ரூ.4 கோடியே 63 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்பட்டு, புல்தரை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். டார். 

தற்போது ஊரடங்கு தடையினால் பணியில்  காலதாமதம் உள்ளது. பூங்காவுக்கு தேவையான சிறிய மின் மோட்டார்கள் மற்றும் மின் சாதனங்கள் வருவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்படும் என்று உதவி பொறியாளர் தெரிவித்தார். 
கால்வாய்களை விரைந்து சரிசெய்யவும், பூங்கா அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்