பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

உத்தமபாளையத்தில் பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-06-13 16:25 GMT
உத்தமபாளையம்: 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

 அதில் டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இதற்கு நகர தலைவர் தெய்வம் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி செயலாளர் நாகவேல் முன்னிலை வகித்தார். 

மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் மோடி கார்த்திக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். 

ஆர்ப்பாட்டத்தில் மது கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதில் பா.ஜ.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்