தூத்துக்குடி மாவட்டத்தில் 289 பேருக்கு கொரோனா பாதிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் 289 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 289 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 365 ஆக உள்ளது. இதேபோன்று நேற்று ஒரே நாளில் 1,023 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
இதனால் மாவட்டத்தில் இதுவரை 48 ஆயிரத்து 398 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டம் முழுவதும் ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் 3 ஆயிரத்து 619 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் இறந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 348 ஆக அதிகரித்துள்ளது.