தூத்துக்குடி அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பலி
தூத்துக்குடி அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பலியானார்.;
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை சிறுபாடு கிராமத்தை சேர்ந்தவர் குமார் மகன் சுரேந்திரன் (வயது 20). இவர் நேற்று மாலை தனது குடும்பத்தினருடன் அந்த பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றாா். அப்போது அவர் குளத்தில் ஆழமான பகுதிக்கு சென்ற போது, எதிர்பாராதவிதமாக குளத்தில் மூழ்கினார்.
அங்கு இருந்தவர்கள் சுரேந்திரனை மீட்க முயன்றும், அவரை மீட்க முடியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுரேந்திரனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.