திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைக்கு 125 டன் வெங்காயம் வந்தது.

திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைக்கு 125 டன் வெங்காயம் வந்தது.

Update: 2021-06-13 15:41 GMT
திருப்பூர்
திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைக்கு 125 டன் வெங்காயம் வந்தது.
125 டன் வெங்காயம் வருகை
சமையலில் முக்கிய பங்கு வகிப்பது பெரிய வெங்காயம் ஆகும். பெரும்பாலான உணவு பொருட்களில் வெங்காயத்தின் பயன்பாடு அதிகமாக இருப்பதால், பலரும் சின்ன மற்றும் பெரிய வெங்காயத்தை அதிகளவு வாங்குவார்கள். திருப்பூரை பொறுத்தவரை வெங்காயம் உள்பட காய்கறிகள் வாங்குவதற்கு பல்லடம் ரோட்டில் தென்னம்பாளையத்தை சந்தை உள்ளது.
இந்த சந்தைக்கு செல்கிறவர்கள் இவற்றை வாங்கி செல்வார்கள். தென்னம்பாளையம் சந்தையில் ஏராளமான மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகள் பெரிய மற்றும் சின்ன வெங்காயம் விற்பனை செய்து வருகிறார்கள். நேற்று தென்னம்பாளையம் சந்தைக்கு 125 டன் பெரிய வெங்காயம் வந்தது.
லாரிகளில்
இது குறித்து வெங்காய வியாபாரிகள் கூறியதாவது:-
தென்னம்பாளையம் சந்தையை பொறுத்தவரை மராட்டியம் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெரிய வெங்காயத்தை வாங்கி விற்பனை செய்து வருகிறோம். இந்த பகுதிகளில் தான் வெங்காய விளைச்சல் அதிகமாக இருந்து வருகிறது. அதன்படி நேற்று திருப்பூர் சந்தைக்கு 5 லாரிகளில் ஒரு லாரிக்கு 25 டன் வீதம் 125 டன் பெரிய வெங்காயம் லாரிகளில் வந்து இறங்கியது.
தற்போது பெரிய வெங்காயம் மொத்த விற்பனையாளர்களுக்கு  ஒரு கிலோ ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுபோல் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஊரடங்கு முடிவடைந்தவுடன் மீண்டும் வெங்காய விற்பனை அதிகரிக்கும். தற்போது ஓட்டல்களில் குறைவான அளவே வெங்காயம் பயன்படுத்துவதால் விற்பனை குறைவாக இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்