கொரோனா தடுப்பு பணிகளில் அதிக கவனம் செலுத்தப்படும் என மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்ற கிராந்தி குமார் பட்டி கூறினார்.

கொரோனா தடுப்பு பணிகளில் அதிக கவனம் செலுத்தப்படும் என மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்ற கிராந்தி குமார் பட்டி கூறினார்.

Update: 2021-06-13 15:36 GMT
திருப்பூர்
கொரோனா தடுப்பு பணிகளில் அதிக கவனம் செலுத்தப்படும் என மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்ற கிராந்தி குமார் பட்டி கூறினார்.
மாநகராட்சி கமிஷனர்
திருப்பூர் மாநகராட்சியில் 4 மண்டலங்கள் உள்ளன. மாநகராட்சி பகுதியில் மொத்தம் 60 வார்டுகளும் உள்ளன. இதனை நிர்வகிக்க மற்றும் மாநகராட்சி பணிகளை மேற்கொள்ளும் வகையில் மாநகராட்சி கமிஷனர் நியமிக்கப்படுகிறார். திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக சிவக்குமார் கடந்த 24-8-2018-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 3 ஆண்டுகள் அவர் பணியாற்றி வந்தார். 
இந்நிலையில் அவர் தற்போது மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஆந்திராவை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான கிராந்தி குமார் பட்டி திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
கொரோனா தடுப்பு பணிகளில்
இந்நிலையில் புதியதாக நியமிக்கப்பட்ட மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் பட்டி நேற்று காலை 11 மணிக்கு பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். இதன் பின்னர் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் பட்டி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- 
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா நோய் தடுப்பு பணிகளில் அதிக கவனம் செலுத்தப்படும். பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். பொதுமக்களின் பிரச்சினைகள் அனைத்தும் வெளிப்படை தன்மையாக தீர்த்து வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்