திருப்பூருக்கு கடத்தப்பட்ட 915 மதுபாட்டில்கள் பறிமுதல்
திருப்பூருக்கு கடத்தப்பட்ட 915 மதுபாட்டில்கள் பறிமுதல்
திருப்பூர்
திருப்பூர் மாநகர நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் 15 வேலம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையில் போலீசார் நேற்று திருமுருகன்பூண்டி சுற்றுச்சாலை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்குரிய வகையில் வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
இந்த சோதனையில் லாரியில் 915 மதுபாட்டில்கள் இருந்ததும், கர்நாடகாவிலிருந்து விற்பனைக்காக திருப்பூர் 15 வேலம்பாளையத்துக்கு கடத்தி வரப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து லாரியுடன் மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், லாரி டிரைவரான தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மங்களாபட்டியை சேர்ந்த எம்.ராஜகோபால் (வயது 31) என்பவரை கைது செய்தனர். இவ்விவகாரத்தில் துரிதமாக செயல்பட்ட நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ராஜன் உள்ளிட்டோரை போலீஸ் கமிஷனர் வி.வனிதா பாராட்டினார்.