ஹாசன் விமான நிலையத்துக்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும் - முதல்-மந்திரி எடியூரப்பா
ஹாசன் விமான நிலையத்துக்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும் என்று கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
இதுகுறித்து கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா கூறுகையில்,
ஹாசன் மற்றும் சிவமொக்கா மாவட்டங்களுக்குச் சென்று வளர்ச்சிப் பணிகள் மற்றும் கொரோனா சூழ்நிலை குறித்து ஆய்வு செய்தேன். ஹாசன் விமான நிலையத்துக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் நானும் விரைவில் அடிக்கல் நாட்ட இருக்கிறோம்.
தளர்வுகளுக்குப் பின் மாநிலத்துக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ள சுகாதாரத்துறையினரை அறிவுறுத்தியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.