ஏற்காடு தோட்டக்கலை பண்ணையில் தினக்கூலி பணியாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டம் அதிகாரியின் சமூக வலைத்தள பதிவை கண்டித்து கோஷம்

ஏற்காடு தோட்டக்கலை பண்ணையில் தினக்கூலி பணியாளர்கள் திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-06-12 21:30 GMT
ஏற்காடு:
ஏற்காட்டில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் சுமார் 150 பணியாளர்கள் வேலை செய்கின்றனர். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாகவும், சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படாத காரணத்தினாலும், பணியாளர்களின் வேலை நாட்களை வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் வேலை என அதிகாரிகள் குறைத்துள்ளனர். இந்நிலையில் தினக்கூலி பணியாளர்கள், ஒரு நாள் வருமானம் தங்கள் குடும்பத்திற்கு போதாது என்றும், வேலை நாட்களை அதிகப்படுத்துமாறும் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று முதல், வாரத்திற்கு 3 நாட்கள் வேலை செய்ய தினக்கூலி பணியாளர்களுக்கு தோட்டக்கலை துறை அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இந்த நிலையில் தோட்டக்கலைத்துறைஅதிகாரி ஒருவர், தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டசில், பணியாளர்களை தரக்குறைவாக பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரின் இந்த பதிவை கண்டித்து, ஏற்காடு அண்ணா பூங்கா முன்பு தினக்கூலி பணியாளர்கள் நேற்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து கோஷம் எழுப்பினர்.

மேலும் செய்திகள்