போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
விருதுநகர் மாவட்டத்திலிருந்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திண்டுக்கல் போலீஸ் சரகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்திலிருந்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திண்டுக்கல் போலீஸ் சரகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்களின் விவரம் வருமாறு:-
ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தென்றல், திண்டுக்கல் வடமதுரை போலீஸ் நிலையத்திற்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் மதுவிலக்கு போலீசார் லட்சுமி பிரபா, திண்டுக்கல் சத்திரப்பட்டிக்கும், சாத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், நிலக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கும், சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் வெங்கடாஜலபதி ஒட்டன்சத்திரத்திற்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் வினோதா திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருத்தங்கல்
அதேபோல விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சந்தியா, திண்டுக்கல் சிறப்பு பிரிவிற்கும், ராஜபாளையத்தில் பணியாற்றிய விக்டோரியா லூர்து மேரி, திண்டுக்கல் நில அபகரிப்பு தடுப்பு பிரிவிற்கும், ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியாற்றும் கவிதா, பழனி போலீஸ் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
திருத்தங்கலில் பணியாற்றும் ரமேஷ்குமார், தேனி மாவட்டம் போடிக்கும், சேத்தூரில் பணியாற்றும் முத்துமணி தேவதானப்பட்டிக்கும், ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சரவண தேவேந்திரன் மற்றும் சாத்தூரில் பணியாற்றும் மங்கையர்திலகம் ஆகிய இருவரும் உத்தமபாளையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே இவர்கள் 12 பேரையும் திண்டுக்கல் போலீஸ் சரகத்திற்கு மாற்றி தென்மண்டல ஐ.ஜி. உத்தரவிட்டிருந்த நிலையில் இவர்களுக்கான பணியிடத்தை திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஒதுக்கீடு செய்துள்ளார்.