விருதுநகர் மாவட்டத்தில் மீண்டும் தடுப்பூசி பணி

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கியது.

Update: 2021-06-12 19:58 GMT
விருதுநகர், 
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தடுப்பூசி போடும் பணி மருந்து தட்டுப்பாட்டால் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் நேற்று மாவட்டத்திற்கு மாநில சுகாதாரத்துறை 8200 டோஸ் தடுப்பூசி மருந்துகளை அனுப்பி வைத்த நிலையில் நேற்று மீண்டும் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. நேற்று விருதுநகரில் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் 530 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. கோேவக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர். மாவட்டம் முழுவதும் ஆர்வத்துடன் பொதுமக்கள் கிராமப்பகுதிகளிலும், நகரப் பகுதிகளிலும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்