காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கடையநல்லூர், பாவூர்சத்திரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-06-12 19:52 GMT
அச்சன்புதூர்:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தென்காசி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கடையநல்லூரில் உள்ள 3 பெட்ரோல் பங்க் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கடையநல்லூர் அட்டைகுளம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் காமராஜ் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் குமந்தாபுரம், கடையநல்லூரில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு நகர தலைவர் சமுத்திரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
கீழப்பாவூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர காங்கிரஸ் தலைவர் சிங்ககுட்டி என்ற குமரேசன் தலைமை தாங்கினார். பாவூர்சத்திரத்தில் தென்காசி-நெல்லை மெயின் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கீழப்பாவூர் மேற்கு வட்டார தலைவர் யேசுஜெகன் தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்