மணல் கடத்தலில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர்
மணல் கடத்தலில் ஈடுபட்ட 13 பேர் கைது
மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் உத்தரவின் பேரில் கஞ்சா விற்பவர்கள் மற்றும் கடத்துபவர்கள், மதுபாட்டில்கள் விற்பவர்கள் மற்றும் சட்ட விரோதமாக மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 13 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்த 6 லாரிகள், 1 டிராக்டர், 2 மோட்டார் சைக்கிள்கள், 1 மணல் அள்ளும் எந்திரம், ஒரு மாட்டு வண்டி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது-.
இதுதவிர திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை விற்பனை செய்தவர்கள் மீது 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 19 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் கள்ளத்தனமாக கள் இறக்கிய 7 பேரும் கைது செய்யப்ட்டு அவர்களிடமிருந்து 44 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தவிர கஞ்சா விற்றவர்களும் கைது செய்யப்பட்டனர்.