நெல்லை தாழையூத்தில் டிரோன் கேமரா மூலம் மக்கள் நடமாட்டம் கண்காணிப்பு
நெல்லை தாழையூத்தில் டிரோன் கேமரா மூலம் மக்கள் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில் போலீசார் தீவிர கண்காமிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவுப்படி பொதுமக்கள் நடமாட்டத்தை போலீசார் டிரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் தாழையூத்து பகுதியில் டிரோன் கேமரா மூலம் மக்கள் அதிகம் நடமாடும் இடத்தை கண்காணித்து, தேவை இன்றி வெளியே சுற்றுபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபன் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே யாரும் சுற்ற வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.