சாத்தான்குளத்தில் கிணற்றில் தவறி விழுந்த மயில் மீட்பு
சாத்தான்குளத்தில் கிணற்றில் தவறி விழுந்த மயிலை தீயணைப்பு படையினர் மீட்டனர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளத்தை சேர்ந்தவர் வக்கீல் ஜெயதீபன். இவரது தோட்டம் பெரும்பத்தில் உள்ளது. அந்த தோட்டத்தில் உள்ள கிணற்றில் ஆண் மயில் ஒன்று தவறி விழுந்து வெளியே வர முடியாமல் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது.
இதுகுறித்து ஜெயதீபன் சாத்தான்குளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கிணற்றுக்குள் இறங்கி மயிலை உயிருடன் பத்திரமாக மீட்டனர். பின்னர் அந்த மயிலை பாதுகாப்பாக வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.