நாயை விஷம் வைத்து கொன்ற மூதாட்டி மீது வழக்கு

கயத்தாறு அருகே நாயை விஷம் வைத்து கொன்ற மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2021-06-12 18:13 GMT
கயத்தாறு:
கயத்தாறு அருகே மூர்த்திஸ்வரம் கிராமத்தில் உள்ள இந்திரா காலனியை சேர்ந்தவர் ஊர்காவலன் மகன் பாலசுப்ரமணியன். இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்தார். இந்த நிலையில், அதே தெருவைச் சேர்ந்த முனியம்மாள் (வயது 60) என்பவர், அந்த நாயை விஷம் வைத்துக் கொன்று விட்டதாக கயத்தாறு போலீசில் பாலசுப்ரமணியன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், முனியம்மாள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, இறந்த நாய் கயத்தாறு கால்நடை டாக்டர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் ரசாயன பரிசோதனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவு வந்த பிறகே நாய் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்