வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 20 பேர் பலி
வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 20 பேர் பலி
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை பரவலை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்றைய பரிசோதனைகளின் முடிவில் 116 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதில், 28 பேர் வேலூர் மாநகராட்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். 116 பேரின் குடும்பத்தினர், உறவினர்கள், உடன் பணிபுரிபவர்களின் உடல்வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு முன்ெனச்சரிக்கையாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 9 பேர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்கள்.
இந்த நிலையில் நேற்று அரசு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 20 பேர் ஒரேநாளில் பலியானார்கள். வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 906 ஆக உயர்ந்துள்ளது.