கண்மாயில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த தொழிலாளி

திருப்பத்தூர் அருகே கண்மாயில் எரிந்த நிலையில் தொழிலாளி பிணமாககிடந்து உள்ளார். அவரது சாவு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-06-12 18:02 GMT
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே கண்மாயில் எரிந்த நிலையில் தொழிலாளி பிணமாககிடந்து உள்ளார். அவரது சாவு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

எரிந்த நிலையில் பிணம்

திருப்பத்தூர் அருகே சந்திரன்பட்டி சிறுகுடி கண்மாய் பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் எரிந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. அதன் அருகே பெட்ரோல் கேனும் கிடந்து உள்ளது. இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் கீழச்சிவல்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் எரிந்து கிடந்தவர் திருப்பத்தூர் அருகே உள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்த அடைக்கப்பன் மகன் கருப்பையா(வயது 35) என தெரிய வந்தது.

கொலையா?

கூலி தொழிலாளியான அவர், தனது மனைவி கவிதா, 2½ வயது குழந்தையுடன் கடந்த 2 மாதங்களாக கல்லாங்்குத்து கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் கண்மாயில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்து உள்ளார்.
அவரது பிணத்தை கைப்பற்றி போலீசார் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். அவரது சாவு குறித்து கவிதா போலீசில் புகார் செய்து உள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்மாய் பகுதியில் பிணமாக கிடந்த கருப்பையா குடும்ப தகராறு காரணமாக பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக யாராவது அவரை கடத்தி கொலை செய்தார்களா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்