வெளிமாநில மதுபாட்டில்கள் பதுக்கிய வாலிபர் கைது
வெளிமாநில மதுபாட்டில்கள் பதுக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
குளித்தலை
குளித்தலை சபாபதி நாடார் தெருவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வெளிமாநில மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த ராம்குமார் (வயது 30) என்பவரை குளித்தலை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 11 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் குளித்தலை புதுக்கோர்ட்டு தெரு வாய்க்கால்மேடு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே சிலர் சாராய ஊறல் போட்டு கொண்டிருந்தனர். இதையடுத்து போலீசார் வருவதை கண்ட அவர்கள் தப்பியோடினர். இதையடுத்து அந்த சாராய ஊறலை போலீசார் கீழே கொட்டி அழித்தனர். இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராஜு (30), தவசு (43), வளர்மதி (55), விஜயகுமார் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து, அவர்களை தேடி வருகின்றனர்.