கண்ணமங்கலம் ரேஷன் கடையில் சமூக இடைவெளியை மறந்த பொதுமக்கள்
கண்ணமங்கலம் ரேஷன் கடையில் பொதுமக்கள் சமூக இடைவௌியை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்றனர்.
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் குளத்து மேட்டுத் தெருவில் உள்ள ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
அப்போது ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு வந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்று வாங்கிச் சென்றனர்.
மேலும் கண்ணமங்கலம் புதிய சாலை மற்றும் ஆலஞ்சி குலாம் மொய்தீன் தெருவில் உள்ள சிலகடைகள் விதிமுறைகளை மீறி திறந்து வியாபாரம் நடந்தது.
இதனை பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.