செம்பனூரில் தடுப்பூசி போட சமூக இடைவெளி இன்றி கூடிய பொதுமக்கள்

செம்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட சமூக இடைவெளி இன்றி பொதுமக்கள் கூடினர்.

Update: 2021-06-12 17:40 GMT
கல்லல்,

கல்லல் ஒன்றியம் செம்பனூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த ஒரு வாரமாக தடுப்பூசி இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று 200 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு டோஸ் வந்தது.அதில் 100 தடுப்பூசிகள் அந்த வட்டார சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ஆரம்ப நிலையத்துக்கு போக மீதி உள்ள 100 தடுப்பூசிகள் செம்பனூர் மருத்துவமனையில் போடப்பட்டது.
தகவலறிந்த 100-க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளி இன்றி அங்கு திரண்டனர். இதனால் கொரோனா பரவும் அபாய நிலை ஏற்பட்டது. உடனே அங்கிருந்த பணியாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு டோக்கன் வழங்கி தடுப்பூசி போட்டனர். பொதுமக்களும் பொதுஇடங்களில் கூடும் போது முககவசம், சமூக இடைவெளியை கடைபிடித்தால் மட்டுமே கொரோனா பரவலில் இருந்து தங்களை காக்க முடியும்.


மேலும் செய்திகள்