தேசூர் அருகே வீட்டுக்கு வெளியே தூங்கிய பெண்ணிடம் நகை பறிப்பு

தேசூர் அருகே வீட்டுக்கு வெளியே தூங்கிய பெண்ணிடம் நகை பறிப்பு

Update: 2021-06-12 17:26 GMT
சேத்துப்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம் தேசூரை அடுத்த பருவதம் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 54). இவர் தனது நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக வீட்டுக்கு வெளியில் கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். 
அப்போது மர்மநபர் ஒருவர், தனலட்சுமி அணிந்திருந்த நகையை பறித்துக் கொண்டு ஓடிவிட்டார்.

இதுகுறித்து தேசூர் போலீஸ் நிலையத்தில் தனலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்