திருவண்ணாமலையில் பலத்த காற்றுடன் மழை

திருவண்ணாமலையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

Update: 2021-06-12 17:21 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் சுட்டெரித்தது. அதேபோல் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. மாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அப்போது திடீரெனப் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்தது.

இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். கார் உள்ளிட்ட வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றன.

திருவண்ணாமலை நகரில் வளையல்காரத் தெரு உள்பட சில பகுதிகளில் பலத்த காற்றால் மரங்கள் சரிந்தன. இரவில் குளிர்ந்த காற்று வீசியது.

மேலும் செய்திகள்