திருவண்ணாமலையில் தனியார் விடுதி ஊழியர் மர்மச்சாவு. கிணற்றில் பிணமாக கிடந்தார்
திருவண்ணாமலையில் தனியார் விடுதி ஊழியர் மர்மச்சாவு. கிணற்றில் பிணமாக கிடந்தார்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை தாமரைநகர் 8-வது தெருவை சேர்ந்தவர் ஜெயசக்திவேல் மகன் அருண் என்ற யுவராஜ் (வயது 30). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் ஓட்டல் மேலாண்ைம படித்து விட்டு திருவண்ணாமலை-செங்கம் சாலையில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
அந்த விடுதியில் தண்ணீர் இறைக்கும் தரை கிணறு ஒன்று உள்ளது. அந்தக் கிணறு மூடி போட்டு மூடப்பட்டுள்ளது. அருண் கடந்த 10-ந் தேதி மாலை வேலையை மற்றொரு நபரிடம் மாற்றி விட்டு விட்டு சென்றவர் திடீரென மாயமானார்.
இந்த நிலையில் நேற்று அந்தக் கிணற்றில் அவர் உயிரிழந்த நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ேபாலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றில் கிடந்த அருணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த அருணின் கழுத்தில் முகக் கவசம் இருந்தது.
இது குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.