வேப்பூர் அருகே முட்டை லோடு ஏற்றி வந்த சரக்கு வாகனம்-கார் மோதல் தம்பதி உள்பட 3 பேர் படுகாயம்

வேப்பூர் அருகே முட்டை லோடு ஏற்றி வந்த சரக்கு வாகனம்-கார் ஆகியன நேருக்கு நேர் மோதியது. இதில் தம்பதி உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2021-06-12 16:54 GMT
வேப்பூர், 

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா மங்களபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயசூர்யா. இவர் சரக்கு வாகனத்தில் சுமார் 16 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள முட்டைகளை ஏற்றிக்கொண்டு விருத்தாசலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். 

 நேற்று காலை 7 மணிக்கு வேப்பூர்-விருத்தாசலம் சாலையில் என். நாரையூர் அருகே சரக்கு வாகனம் வந்து கொண்டிருந்தது. அப்போது , எதிரே கடலூரிலிருந்து வேப்பூர் நோக்கி கார் ஒன்று சென்றது. எதிர்பாராதவிதமாக சரக்கு வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. 

3 பேர் படுகாயம்

இதில், சாரக்கு வாகனம் சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் அதில் இருந்த முட்டைகள் அனைத்தும் உடைந்து சேதமாகின. மேலும் அதில் வந்த ஜெயசூர்யாவுக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டது. 

காரை ஓட்டி வந்த கடலூர் செம்மண்டலம் தவுலத் நகரை சேர்ந்த சீனிவாசன் (வயது 49), அவரது மனைவி சாந்தி (47) ஆகியோரும் படுகாயமடைந்தனர். அவர்களை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக  பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு ஜெயசூர்யாவும், சீனிவாசன், அவரது மனைவி சாந்தி ஆகியோர் கடலூர் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கபட்டனர். 

அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.  இது குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்