கிராமங்களில் கலெக்டர் ஆய்வு

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கிராமங்களில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2021-06-12 14:38 GMT
நத்தம்:

நத்தம் அருகே கோவில்பட்டி, மூங்கில்பட்டி ஆகிய கிராமங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறையினரால் அறிவிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதிகளை, கலெக்டர் விஜயலட்சுமி நேற்று நேரில் ஆய்வு செய்தார். 

அப்போது தொற்று பாதித்த இடங்களில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சுகாதார பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து நத்தம் அரசு துரைக்கமலம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் தடுப்பூசி போடும் பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.

 ஆய்வின்போது பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குனர் ராஜா, வட்டார மருத்துவ அலுவலர் சேக் அப்துல்லா, பேரூராட்சி செயல் அலுவலர் சரவணக்குமார், சுகாதார மேற்பார்வையாளர் மகாராஜன், துப்புரவு ஆய்வாளர் சடகோபி மற்றும் சுகாதாரத்துறை, பேரூராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்