ஆர்ப்பாட்டம்

பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2021-06-12 14:35 GMT
முதுகுளத்தூர், 
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து முதுகுளத் தூரில் காங்கிரஸ் கட்சியினர் வட்டார தலைவர் ராமர் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முதுகுளத்தூர் மேற்கு வட்டார தலைவர் புவனேசுவரன், மாவட்ட பொறுப்பாளர் ராம பாண்டி, முன்னாள் ஊராட்சிதலைவர் காக்கூர் போஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் வட்டார தலைவர் ஜான், கொடும்பலூர் கணேசன், நாகூரான், மருதகம் கோவிந்தராஜ், அலங்காநல்லூர் ராஜபாண்டி, ராம பாண்டி உள்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண் டனர். முடிவில் முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் காக்கூர் போஸ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்