கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது

கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள வங்கி அதிகாரிகளுக்கான கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக்கூட்டம் நேற்று கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது.

Update: 2021-06-12 03:36 GMT
கும்மிடிப்பூண்டி, 

தாசில்தார் மகேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு, வட்டார மருத்துவர் டாக்டர் கோவிந்தராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது வங்கி வாசலிலும், உள்பகுதியிலும் தேவையில்லாமல் சமூக இடைவெளியின்றி அதிக அளவில் வாடிக்கையாளர்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் முறையாக பின்பற்றுவதை உறுதி செய்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் வங்கி மேலாளர்கள் 10 பேர் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்